இன்டர்ஸ்டெல்லார் வாய்ப்பை இழந்த நடிகர் சித்தார்த்

இன்டர்ஸ்டெல்லார் வாய்ப்பை இழந்த நடிகர் சித்தார்த்
Updated on
1 min read

'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட நிகழ்வை, நடிகர் சித்தார்த் நினைவுகூர்ந்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காவியத் தலைவன்'. இப்படம் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சித்தார்த்.

அந்த நிகழ்ச்சியில், 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு குறித்து சித்தார்த் கூறும்போது, "காலரைத் தூக்கிக் கொண்டும், அதேசமயத்தில் வருத்தப்படுற மாதிரி ஒரு விஷயம் சொல்கிறேன்.

நான், ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் முன்பு நடித்துக் காட்டியிருக்கிறேன். 'இன்டர்ஸ்டெல்லார்' ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு அழைத்தார்கள். நானும் சென்று ஸ்கிரீன் டெஸ்ட் - ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அதில் நான் பாஸ் ஆகவில்லை.

கிறிஸ்டோபர் நோலன் என் முகத்தைப் பார்த்திருக்கிறார். என்னுடைய பெயர் கிறிஸ்டோபர் நோலனுக்கு தெரியும். அவரிடம் இருந்து எனக்கு இ-மெயில் வந்திருக்கிறது.

சில பரீட்சைகள் எல்லாம் எழுதுவதே பெரிய விஷயம். பாஸ் ஆகவில்லை என்றாலும்கூட, அந்தப் பரீட்சையில் பங்கேற்றதே பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கிறேன்" என்று சித்தார்த் கூறியிருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in