

அஜித் நடித்துள்ள 'விவேகம்' டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் மே 11ம் தேதி 'விவேகம்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. முயற்சியைக் கைவிடாதே (NEVER EVER GIVEUP)" என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
'விவேகம்' டீஸருக்காக அஜித்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில:
தனுஷ்: வாவ், அஜித் சாரின் விவேகம் ட்ரெய்லர் அற்புதமாக இருக்கிறது. அஜித், பார்க்க அழகாக இருக்கிறார். குழுவுக்கு வாழ்துக்கள்.
ஜெயம் ரவி: அந்த மனிதருக்கு தலைவணங்குகிறேன். மாஸ்
அருள்நிதி: NEVER EVER GIVE UP தலை பார்க்க அட்டகாசமாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன்: தல சிறப்பாக இருக்கிறார். NEVER EVER GIVE UP . சிவா சார், அற்புதம்.
ஒளிப்பதிவாளர் திரு: தல அஜித் விவேகம் டீஸரில் எடுப்பாக, அட்டகாசமாக இருக்கிறார்
கலையரசன்: தல பயங்கரம். ஒவ்வொரு நொடியும் ரசித்தேன். மரண மாஸ். பல லட்சம் பேருக்கு உந்துசக்தி நீங்கள்.
ராதிகா சரத்குமார்: வாவ், அஜித். விவேகம் பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் பார்க்க அற்புதமாக, அழகாக இருக்கிறார்.
அருண்விஜய்: தனிச்சிறப்புடைய டீஸர், மிரட்டலான காட்சியமைப்புகள். உயர்தரம். தல தோற்றத்தில் கலக்கியிருக்கிறார்.
ஜெ.அன்பழகன்: விவேகம் டீஸர் ஸ்டைலாக இருக்கிறது, ஆச்சரியப்படுத்துகிறது. தல அஜித்தின் உடல், உடைகளில் சிறந்த மாற்றம்
தாமரை: திரு.அஜித் மற்றும் விவேகம் குழுவுக்கு என் வாழ்த்துகள். அவரது ஈடுபாட்டை சொல்ல அற்புதம் என்ற வார்த்தை போதும்.
விக்ரம் பிரபு: இயக்குநர் சிவாவுக்கு வாழ்த்துகள். ஸ்டைலாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. அஜித் சாருக்கும், விவேகம் குழுவுக்கும் வாழ்த்துகள்.
சாந்தனு : வெறித்தனத்தின் மறுவடிவம். அற்புதமான டீஸர் சிவா சார். தல பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். மிகவும் பிடித்திருந்தது.
ரம்யா நம்பீசன்: விவேகம் டீஸர் மின்னுகிறது. அஜித் சார் முன்பை விட அதிகமான ஈடுபாட்டோடும், ஸ்டைலாகவும் இருக்கிறார். இயக்குநர் சிவாவுக்கும், மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்