கபாலி டீஸரின் சாதனையை முறியடித்தது விவேகம் டீஸர்

கபாலி டீஸரின் சாதனையை முறியடித்தது விவேகம் டீஸர்
Updated on
1 min read

12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'விவேகம்' டீஸர்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. மே 11-ம் தேதி 'விவேகம்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP" என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை 'விவேகம்' டீஸர் நிகழ்த்தியுள்ளது. முன்பாக 'கபாலி' 24 மணி நேரத்திலும், 'கட்டமராயுடு' டீஸர் 57 மணி நேரத்திலும், 'பைரவா' 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'விவேகம்' டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in