என் உதவியாளர்களால் விவேகம் டீஸர் வெளியானதா?- எடிட்டர் ரூபன் கடும் சாடல்

என் உதவியாளர்களால் விவேகம் டீஸர் வெளியானதா?- எடிட்டர் ரூபன் கடும் சாடல்
Updated on
1 min read

'விவேகம்' டீஸர் லீக்கானதற்கு காரணம் ரூபனின் உதவியாளர்கள்தான் என்று வெளியான செய்திக்கு ரூபன் கடுமையாக சாடியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. மே 11-ம் தேதி 'விவேகம்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த டீஸர் வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்கானது. எங்கிருந்து வெளியானது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் எடிட்டர் ரூபனின் உதவியாளர்கள் மூலமாகத் தான் வெளியானது என்று செய்திகள் வெளியானது.

இச்செய்தியை குறித்து எடிட்டர் ரூபன், "என்னுடைய திரைப்படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர் யார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய சுய விளம்பரத்துக்காக போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.

எனது பெயரைக் களங்கப்படுத்தியதற்காக நான் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சமூக ஊடகங்கள் தவறானவற்றை பரப்ப எளிதான கருவியாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஒரு வீடியோ சேனலை துவக்கி எதை வேண்டுமானாலும் பரப்பும் நிலையே உள்ளது. சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு செய்வதற்கு முன் தயவுசெய்து சிறிதேனும் அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை 'விவேகம்' டீஸர் நிகழ்த்தியுள்ளது. டீஸர் வெளியானது முதல் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in