சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்: விவேக் வேதனை

சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்: விவேக் வேதனை
Updated on
1 min read

சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள் என்று இரட்டை வரிவிதிப்பு முறை குறித்து விவேக் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் தமிழ் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு இன்னும் எந்தவொரு அரசாணையையும் பிறப்பிக்கவில்லை.

இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய அதிருப்தியை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இரட்டை வரிவிதிப்பு முறை குறித்து விவேக் கூறியிருப்பதாவது:

சினிமாவை காப்பாற்ற ஈகோவை விடுத்து பழைய,புதிய நிர்வாகிகள் (விஷால்+தாணு)ஒன்றிணைய வேண்டும் என்பது என் வேண்டுகோள். சினிமா வெளியீட்டு, டிக்கெட் விலை இவைகளை நெறிப்படுத்தாவிட்டால், விரைவில் தயாரிப்பாளர்களும், சினிமாவும் அழியும். இதில் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் வரி வேறு.

திருட்டுவிசிடி, பதிவிறக்கம், யார் யாரோ செய்யும் விமர்சனங்கள், டிக்கெட் விலை, இப்போது வரி - சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள். உச்ச நட்சத்திரங்களும், பெரும் தயாரிப்பாளர்களும் சினிமா வரியை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால்,சிறு தயாரிப்பாளரின் குரல்வளை நெறிக்கப்படும்

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in