

ஜூலை 19-ம் தேதி முதல் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கப்படவுள்ளது.
'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் 'இப்படை வெல்லும்' ஆகிய படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் உதயநிதியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழில் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதவுள்ளார், தர்புகா சிவா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் குற்றாலத்தில் ஜூலை 19-ம் தேதி முதல் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.