

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக அசோக் செல்வன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'அம்மணி' படத்தைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் வெளியான இந்திப் படமான 'இந்தி மீடியம்' மிகவும் பிடித்திருந்ததால், அதனை ரீமேக் செய்யும் பணியில் இறங்கினார்.
ஆனால் அப்படம் மலையாளம் படத்தின் தழுவல் உள்ளிட்ட சிக்கல்கள் நிலவியதால், தற்போது அதனை பின்னணியாக கொண்டு புதிய கதையொன்றை எழுதி முடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அக்கதைக்கு 'ஹவுஸ் ஓனர்' என பெயரிட்டுள்ளார்.
இக்கதையில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். தற்போது திரைக்கதை அமைக்கும் பணியை முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.