விஷ்ணு விஷாலின் ராட்சசன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷ்ணு விஷாலின் ராட்சசன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'ராட்சசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதலில் 'மின்மினி' என பெயரிடப்பட்டு இருந்தது. அப்பெயரை 'ராட்சசன்' என படக்குழு மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை படக்குழு உறுதிப்படுத்தாமல் இருந்தது.

இன்று (ஜூலை 17) விஷ்ணு விஷால் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. அதில் 'ராட்சசன்' என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தியுள்ளது படக்குழு. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதையாகும். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் நடித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in