

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'கொடி வீரன்' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் சசிகுமார். அதனைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகும் படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் சசிகுமாரும், தெலுங்கில் நானியை வைத்தும் ஒரே கதையை இயக்க முடிவு செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.
எப்போதுமே ஒரு படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுபவர் சசிகுமார். அதே போன்று 'கொடி வீரன்' படத்தை முடித்துவிட்டு, சமுத்திரக்கனி படம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
'நாடோடிகள்' மற்றும் 'போராளி' ஆகிய படங்களில் இணைந்து வெற்றியைக் கொடுத்தது சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.