

முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் 'கொடி வீரன்' படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக தயாரிப்பாளர் இந்தர்குமார் நடித்துள்ளார்.
சசிகுமார் நடித்து வரும் 'கொடி வீரன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
இதுவரை இப்படத்தில் வில்லனாக யார் நடித்து வருகிறார் என்பது தெரியாமல் இருந்தது. இதில் 'குற்றம் 23' மற்றும் 'தடம்' படத்தின் தயாரிப்பாளர் இந்தர்குமார் இப்படத்தின் மூலம் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகிறார்.
விதார்த், பூர்ணா, மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் சசிகுமாருடன் நடித்து வருகிறார்கள். முத்தையா இயக்கிவரும் இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். நவம்பரில் இப்படத்தை வெளியிடும் முனைப்பில் படக்குழு பணியாற்றி வருகிறது.