தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது: சஷிகாந்த் கடும் சாடல்

தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது: சஷிகாந்த் கடும் சாடல்
Updated on
1 min read

தயாரிப்பாளர்களையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள தமிழக அரசு விரும்புவதாக தயாரிப்பாளர் சஷிகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

ஜிஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் தமிழ் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு இன்னும் எந்தவொரு அரசாணையையும் பிறப்பிக்கவில்லை.

இப்பிரச்சினைகளை முன்வைத்து ஜூலை 7-ம் தேதி வெளியீடாக இருந்த 'விக்ரம் வேதா' தள்ளிவைக்கப்பட்டது. தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய அதிருப்தியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 'விக்ரம் வேதா' தயாரிப்பாளர் சஷிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடைசியாக திரையரங்கங்கள் எப்போது மூடப்பட்டன என்பது பற்றி எனக்கு உத்தரவாதமாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது முன்மாதிரியற்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுதும் பிற மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் புரிந்து கொண்டு தங்கள் மாநில வரிவிதிப்பை சீர்செய்துள்ளனர், ஆனால் தமிழக அரசு மட்டும் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளவில்லை என்பது ஏன்?

இந்தத் துறையையும் அதன் தயாரிப்பாளர்களையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. எனவேதான் படம் திரைக்கு வரும் சமயத்தில் வரிவிலக்கு அளிக்கிறோம் என்ற பெயரில் லஞ்சங்களைச் சுரண்ட முடியும். அமைப்பு ரீதியான இந்த மிகப்பெரிய தவறு முடிவுக்கு வரவேண்டும்.

எனவே நாம் அனைவரும், குறிப்பாக மக்களிடையே இந்த உண்மையை வேகமாகவும் பரவலாகவும் எடுத்துச் செல்லக்கூடிய திறன் கொண்ட நட்சத்திரங்கள் தங்கள் கருத்துகளை இன்னும் கருத்தொருமித்த வழியில் இந்த பிரச்சினையை உரிய சிறந்த முறையில் பேச முன் வர வேண்டும் என்று நான் என் குரலைப் பதிவு செய்வதுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் உங்கள் குரல் எப்போதையும் விட இப்போது உரக்கவும் தெளிவாகவும் ஒலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

இவ்வாறு சஷிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in