லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ஹவுஸ் ஓனர்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ஹவுஸ் ஓனர்
Updated on
1 min read

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள படம் 'ஹவுஸ் ஓனர்'. ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். 'ஹவுஸ் ஓனர்' படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:

ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிட்ட அப்படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பைக்கு சென்று இருந்த போது இந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது. அப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அதனை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அப்படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை.

ஆனால் அப்படம் அளித்த உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதனை நகைச்சுவையோடு சொல்லவுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும்

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in