ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சர்ச்சை: சிம்பு - தனுஷ் கருத்து

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சர்ச்சை: சிம்பு - தனுஷ் கருத்து
Updated on
1 min read

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சர்ச்சையாகி இருப்பது குறித்து சிம்பு மற்றும் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பாடல்களை அதிகமாக பாடியதாகவும், இதனால் டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என ட்விட்டர் தளத்தில் பலரும் கருத்து தெரிவித்தார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் போதே பலரும் வெளியேறியுள்ளார்கள்.

'நேற்று இன்று நாளை' என பெயரிடப்பட்ட இங்கிலாந்து இசை நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களும், 12 தமிழ் பாடல்களும் பாடப்பட்டத்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி சர்ச்சையானது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சைக் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "இசைக்கு மொழியில்லை. அதனால்தான் இசை மக்களை இணைக்கிறது. அத்தகையதே இசைமேதை ரஹ்மானின் இசையும். அமைதி நிலவுட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஹ்மானுக்கு மொழி ஏதும் கிடையாது. அவரது மொழியே இசைதான். ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மானே. #ஜெய்ஹோ" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in