சூர்யா பிறந்தநாளன்று வெளியாகிறது தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக்

சூர்யா பிறந்தநாளன்று வெளியாகிறது தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக்
Updated on
1 min read

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி வெளியாகிறது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால், ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்த நாளனறு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in