

முதலமைச்சருடனான சந்திப்பு தள்ளிப்போவதால் இன்றும் காட்சிகளை ரத்து செய்து போராட்டத்தை தொடரப்போவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பான பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால் மூன்றாவது நாளாக நேற்றும் திரையரங்குகளை மூடும் போராட்டம் தொடர்ந்தது. பேச்சு வார்த்தைக்காக நேற்று அரசு தரப்பில் இருந்து அழைப்பு வராததால் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் திரையரங்குகளில் காட்சிகளை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, “கடந்த 2 நாட்களாக முதலமைச்சருடனான பேச்சுவார்த்தைக்காக காத்திருக் கிறோம். விரைவில் அழைப் பதாக தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு திரையுலகின ருடன் கலந்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும். ஆகவே, 4-வது நாளாக (இன்றைக்கும்) தொடர்ந்து திரை யரங்க காட்சிகளை ரத்துசெய் துள்ளோம். அனைத்து பிரச்சினை களும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாகும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
இந்நிலையில் ‘2.0’ படக்குழு சார்பில் 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை பகுதி திரையரங்க உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசும்போது, “ஒரே வரி கட்டுவதற்கு தயாராக இருக்கி றோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்கு கிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 15 வருடங்களாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்ப டாமல் உள்ளது. ஒரு நியாயமான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துக் கொடுங்கள். அனைத்து டிக்கெட்களிலும் விலையைப் போட்டு, ஜிஎஸ்டி எண்ணைக் குறிப் பிட்டே மக்களிடம் அளிக்கிறோம் என்று முதல்வரிடம் தெரிவித்துள் ளோம்’’ என்றார்.
ரஜினிக்கு கமல் நன்றி
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி குறித்து தமிழக அரசிடம் தமிழ் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த் திரை யுலகை நம்பியுள்ள லட்சக்கணக் கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரையுலகி னரின் கோரிக்கையை பரிசீலிக்கு மாறு தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த பதிவு குறித்து கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இரட்டை வரி விதிப்புக்கு எதிராக தங்கள் அக்கறை குரலை பதிவு செய்தமைக்கு நன்றி. கனவான் களாக நாம் முதலில் நமது எதிர்ப் பைப் பதிவு செய்வோம். பின்னர் மற்றதை பார்த்துக் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.