கூட்டத்தில் ஒருத்தன் வெளியீடு மாற்றம்: ஜூலை 28-ல் வெளியாகிறது

கூட்டத்தில் ஒருத்தன் வெளியீடு மாற்றம்: ஜூலை 28-ல் வெளியாகிறது
Updated on
1 min read

ஜூலை 14-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட 'கூட்டத்தில் ஒருத்தன்', அதன் வெளியீட்டை மாற்றியமைத்துள்ளது.

இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக தமிழக அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு, ஜூலை 7-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஜூன் 30-ம் தேதி வெளியீட்டு படங்கள் தொடர்ச்சியாக திரையிட்டு வருகிறார்கள். புதிதாக 'ஸ்பைடர் மேன்' படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

'பண்டிகை', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', 'ரூபாய்' உள்ளிட்ட படங்கள் ஜூலை 14-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தத் தொடங்கினார்கள். இத்தனை படங்கள் எப்படி ஒரே நாளில் என்ற சர்ச்சை எழுந்தது.

அதனைத் தொடர்ந்து 'கூட்டத்தில் ஒருவன்' திரைப்படம் தங்களுடைய வெளியீட்டை ஜூலை 28-ம் தேதி மாற்றியமைத்துள்ளார்கள். இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "எங்களது 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை ஜூலை 28-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றியமைக்கிறோம். " என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in