

இயக்குநர் வசந்தபாலன் இன்னும் பல விருதுகளுக்குத் தகுதியானவர் என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்துக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளது.
இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், '' 'காவியத் தலைவன்' படத்துக்காக சிறந்த நடிகர் விருது வென்றதில் பெருமை. அன்பார்ந்த வசந்தபாலன், ஒய்நாட் ஸ்டூடியோஸ் இருவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள். எப்போதும் 'காவியத் தலைவன்' எனக்கு விசேஷமான படமாக இருக்கும்.
கலை பற்றிய படத்துக்கு கடைசியில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வசந்தபாலன் இன்னும் பல விருதுகளுக்குத் தகுதியானவர். 'காவியத்தலைவன்’ படத்துக்கு மொத்தம் 10 மாநில விருதுகள். பெரிய பெருமை'' என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.