

தமிழக அரசு சார்பில் 2009 முதல் 2014 வரையிலான 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய 6 ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்வதற்கான தேர்வுக்கு குழு, ஓய்வுபெற்ற நீதிபதி எ.ராமன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக் கான திரைப்பட விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.
2009ம் ஆண்டு
அதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
2009-ம் ஆண்டின் சிறந்த படமாக ‘பசங்க’, சிறந்த நடிகராக கரண் (மலையன்), சிறந்த நடிகையாக பத்மபிரியா (பொக்கிஷம்), சிறந்த இயக்குநராக வசந்த பாலன் (அங்காடித் தெரு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2010ம் ஆண்டு
2010-ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக ‘மைனா’, சிறந்த நடிகராக விக்ரம் (ராவணன்), சிறந்த நடிகையாக அமலாபால் (மைனா), சிறந்த இயக்குநராக பிரபு சாலமன் (மைனா) உள்ளிட் டோர் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.
2011ம் ஆண்டு
2011-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘வாகை சூடவா’, சிறந்த நடிகராக விமல் (வாகை சூடவா), சிறந்த நடிகையாக இனியா (வாகை சூடவா), சிறந்த இயக்குநராக ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2012ம் -ம் ஆண்டு
2012-ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக ‘வழக்கு எண்.18/9’, சிறந்த நடிகராக ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்), சிறந்த நடிகையாக லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்), சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு
2013-ம் ஆண்டின் சிறந்த படமாக ‘இராமானுஜன்’, சிறந்த நடிகராக ஆர்யா (ராஜா ராணி), சிறந்த நடிகையாக நயன்தாரா (ராஜா ராணி), சிறந்த இயக்குநராக ராம் (தங்க மீன்கள்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2014ம் ஆண்டு
2014-ம் ஆண்டில் வெளியான படங்களில் சிறந்ததாக ‘குற்றம் கடிதல்’, சிறந்த நடிகராக சித்தார்த் (காவியத் தலைவன்), சிறந்த நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை) சிறந்த இயக்குநராக ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சின்னத்திரை விருது கள் மற்றும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 149 திரைப்படங் களுக்கு அரசு மானியத்தையும் முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.