

'மாரி 2' படத்தின் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவாரா அனிருத் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படம் 'மாரி'. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இதன் 2-வது பாகத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.
'மாரி ' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகுவாக பேசப்பட்டது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியிருந்தார். தற்போது 'மாரி 2' படத்தின் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக பாலாஜி மோகன் அறிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏனென்றால் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கதைக்களத்துக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தனுஷ் தெரிவித்தார். அதே போல 'மாரி 2' படத்துக்கு இசையமைப்பாளர் யார், மேலும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தைப் போலவே 'மாரி' படத்தின் முதல் பாகத்திலிருந்து சில பின்னணி இசைகளை இரண்டாம் பாகத்துக்கு உபயோகிக்க இருக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.
இப்போதைக்கு தனுஷ் மற்றும் ரோபோ ஷங்கர் மட்டுமே 'மாரி 2' படத்தில் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.