

தமிழக அரசு வரியை நீக்கவோ, குறைக்கவோ செய்தல் வேண்டும் என்று விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக திரையரங்குகளின் சினிமா டிக்கெட்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பால், விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், தமிழக அரசு கேளிக்கை வரியும் விதித்தது. அதனை தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து அரசிடம் பேசி தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
சினிமா டிக்கெட்களின் விலை உயர்வால், திரையரங்குகளில் கூட்டம் குறைவாக உள்ளது என்று பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இது குறித்து விவேக், "டிக்கெட் விலையை உயர்த்துவதால் சினிமா தொழில் வளம் பெறாது.வீழும். தயவுக் கூர்ந்து தமிழக அரசு வரியை நீக்கவோ, குறைக்கவோ செய்தல் வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் விவேக்,