இந்த ஆண்டில் 3 படங்களைத் தயாரிக்க அட்லீ திட்டம்

இந்த ஆண்டில் 3 படங்களைத் தயாரிக்க அட்லீ திட்டம்
Updated on
1 min read

2017-ம் ஆண்டில் 'சங்கிலி புங்கில் கதவ தொற' படத்தைத் தொடர்ந்து 2 படங்களைத் தயாரிக்க இயக்குநர் அட்லீ திட்டமிட்டுள்ளார்.

ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடவுள்ளது.

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார் அட்லீ. அப்படத்தைத் தொடர்ந்து 2 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அட்லீ பேசியதாவது:

"உதவி இயக்குநராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் 'ஏ ஃபார் ஆப்பிள்'.

இதன் முதல் படம்தான் விரைவில் வெளிவர உள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக் இயக்கியுள்ளார். என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்துவரும் என் நண்பன் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படம் எனது 2-வது தயாரிப்பாக இருக்கும். என் குழுவில் சிறந்த திரைக்கதையாளராக இருக்கும் அசோக் இயக்கும் படம் 3-வது தயாரிப்பு. இப்படங்கள் குறித்து ஜூன் மாதம் அறிவிக்க உள்ளேன்" என்று பேசினார் அட்லீ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in