

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்துக்கு 'சீதக்காதி' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்'. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.
மீண்டும் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
இன்று படப்பூஜை நடைபெற்ற இப்படத்துக்கு 'சீதக்காதி' என தலைப்பிட்டுள்ளார்கள். விஜய் சேதுபதியுடன் நடிக்கவிருப்பவர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 24ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள 'ஒரு பக்க கதை' படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து, வெளியீட்டு தயாராகவிருப்பது குறிப்பிடத்தக்கது.