

இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஸ்பெஷல் 26' திரைப்படம் தென்னிந்திய மொழிகள் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
அக்ஷய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடிக்க நிரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான படம் 'ஸ்பெஷல் 26'. 1987-ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்டு நடத்தப்பட்ட ஓர் உண்மையான கொள்ளை சம்பவத்தை பின்னணியாக கொண்டு படமாக்கி இருந்தார்கள்.
பிப்ரவரி 2013-ல் வெளியான இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகர் தியாகராஜன். தமிழில் அக்ஷய்குமார் வேடத்தில் தனது மகன் பிரசாந்த் நடிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றிலும் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடித்தி வருகிறார் தியாகராஜன்.