ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
Updated on
1 min read

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கமல் ஹாசன் பல்வேறு கருத்துகளை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கமல் ஹாசனைச் சந்திக்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரம் கேட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை ஆழ் வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக் கறிஞர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கமல்ஹாசனைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆனதால், சந்தித்தோம். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம்.

இந்த சந்திப்பின் போது, ‘‘நாம் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது’’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ‘‘நாம் எப்போதுமே அரசியலில் இருக்கிறோம். வாக்களிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். ஓட்டுக் கேட்டு போவதெல்லாம் நமக்கு தேவையில்லை. நமது வேலை களை கவனிப்போம்’ என்றார். அதே நேரத்தில் முன்பை விட அதிக முனைப்புடன் பணிகளைக் கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in