ஆர்யா - சந்தானம் - ராஜேஷ் மீண்டும் இணையும் வி.எஸ்.ஓ.பி

ஆர்யா - சந்தானம் - ராஜேஷ் மீண்டும் இணையும் வி.எஸ்.ஓ.பி
Updated on
1 min read

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடிக்கும் படத்திற்கு 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' (வி.எஸ்.ஓ.பி) என பெயரிடப்பட்டுள்ளது.

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் தோல்வியை அடுத்து, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீரவேண்டிய சூழலில் இயக்குநர் ராஜேஷ். ஆர்யாவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தை முன்னரே இயக்கி வெற்றி பெற்றதால், அதற்கு கைமாறாக ஆர்யாவே இத்திரைப்படத்தை தயாரிக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜேஷின் வழக்கமான வெற்றிக் கூட்டணியான சந்தானத்தோடு, நடிகர் கருணாகரனும் இதில் நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்க, இசையைமைப்பளராக இமான் இணைகிறார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in