Published : 03 Jun 2017 09:42 AM
Last Updated : 03 Jun 2017 09:42 AM

பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது - இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

‘டிமாண்ட்டி காலனி’ மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அஜய் ஞானமுத்து, தற்போது ‘இமைக்கா நொடிகள்’ மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்கத் திரும்பியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதைக்களம் என்ன?

சென்னையில் வசிக்கும் ஜோடி அதர்வா - ராஷி கண்ணா. பெங் களூருவில் இருக்கும் சிபிஐ அதி காரி நயன்தாரா. இவர்கள் இரு வருக்கும் தொலைபேசி வாயிலாக சவால் விடுகிறார் வில்லன் அனுராக் கஷ்யப். தொடர்ச்சியாகக் கொலை கள் செய்யும் சீரியல் கில்லர். அவர் எதற்காக இந்தக் கொலை களைச் செய்கிறார் என்ற தேடல் தான் கதை. இப்படத்தில் அனுராக் கஷ்யப் நடிக்கும் கதாபாத்திரத் தில் முதலில் கெளதம் மேனன் நடிப்பதாக இருந்தது.

இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திலும் முதலில் ஒரு நாயகன் நடிப்பதாக இருந்ததாமே?

உண்மையில் இக்கதையை எழுதும்போது ஒரு நாயகனை மனதில் வைத்துத்தான் எழுதி னேன். எழுதி முடிக்கும் போதுதான், இந்தக் கதாபாத்திரத்தை திறமை வாய்ந்த ஒரு நடிகை செய்தால் நன்றாக இருக்குமோ என்று தோன் றியது. அதற்காக கதையில் சில மாற்றங்களைச் செய்தபோது அது இன்னும் வலுவானது. நானும், என்னைச் சுற்றியிருப்பவர்களும் இந்தக் கதாபாத்திரத்துக்கு நயன் தாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினோம். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்கச் சம்மதித்தார்.

இயக்குநர் அனுராக் கஷ்யப்பை இயக் கிய அனுபவம் எப்படி இருந்தது? அவர் ஏதாவது ஆலோசனைகளைச் சொன்னாரா?

ஒரு இயக்குநராக அவர் என் னிடம் எதுவுமே பேசவில்லை. படப்பிடிப்பில் முழுக்க முழுக்க ஒரு நடிகராகத்தான் இருந்தார். என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். அவர் நடித்து முடித்த காட்சிகளை மானிட்டரில் பார்க்கச் சொல்வேன். ‘‘மானிட்டர் எல்லாம் பார்க்க மாட்டேன். உனக்குச் சரி யாக இருந்தால் சொல்லு. சரியாக இல்லாவிட்டால் மறுபடியும் பண் றேன்” என்பார். எத்தனை முறை ரீ-டேக் கேட்டாலும் சளைக்காமல் நடித்துக் கொடுத்தார். சீன் நன்றாக அமைந்தால் பாராட்டிவிட்டுச் செல் வார். டீஸர் தயாரானவுடன் அவரி டம்தான் முதலில் காட்டினேன். “சூப்பராக இருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று பாராட்டினார்.


படப்பிடிப்பு தளத்தில் அஜய் ஞானமுத்து, அனுராக் கஷ்யப்

பட்டுக்கோட்டை பிரபாகரோடு பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

நான் எப்போதும் எழுத்தாளர் களோடு பணிபுரிய வேண்டும் என்று விரும்புவேன். மலையாளத்தில் அனைத்து இயக்குநர்களும் எழுத் தாளர்களோடுதான் பணிபுரி கிறார்கள். எழுத்தாளர்களின் அறிவு பூர்வமான எழுத்துக்கும், இயக்கு நர்களின் எழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எழுத் தாளர்கள் வசனங்களை வலுவாக எழுதிக் கொடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை. பட்டுக்கோட்டை பிரபாகர் சார் த்ரில்லர் நாவல்களில் ஸ்பெஷலிஸ்ட். இப்படம் த்ரில்லர் வகைதான் என்றாலும் அதற்குள் காதல், சண்டை என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இது த்ரில்லர் கதை என்பதால் அவரோடு பணிபுரிந்தேன்.

‘டிமாண்ட்டி காலனி’ முழுக்க அறைக்குள் நடக்கும் கதை. ‘இமைக்கா நொடிகள்’ பெரிய பொருட்செலவுள்ள படம். நட்சத் திரங்களும் அதிகம். இதனால் ஏதாவது கடினமாக உணர்ந்தீர் களா?

நான் ‘டிமாண்ட்டி காலனி’ படத் தில் பல சவால்களைச் சந்தித்தேன். பொருட்செலவு குறைவு, இரண் டாம் பாதி முழுக்க ஒரு அறைக் குள்தான் படம் என அப்படத்தில் நிறைய சவால்கள் இருந்தன. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அப்படிப்பட்ட சவால்கள் ஏது மில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் பணிபுரியும்போது இந்த மாதிரி பெரிய பொருட்செலவுள்ள படங்களில்தான் பணிபுரிந்திருக் கிறேன். அதிலிருந்துதான் சினி மாவையே கற்றுக் கொண்டேன். பெரிய பொருட்செலவுடன் படம் எடுக்கும்போது நம் மீது பெரிய சுமைகள் இருக்காது. நல்ல நடிகர்கள், தொழில்நுட்பக் கலை ஞர்கள் இருப்பார்கள். நாம் எழுதிய காட்சியைச் சரியாகச் செய்துவிட்டாலே வெற்றிதான்.

‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளீர்கள். விஜய் - சூர்யா உள்ளிட்டவர்களில் யாரையாவது ஒருவரை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கலாமே?

அவர்களிடம் கதை சொல்லும் போது, கதையை அவர்கள் நகர்த்தும் விதமாக இருந்தால் தான் சரியாக இருக்கும். ஆனால், இப்படத்தில் அதர்வா கதாபாத் திரத்துக்கு அவ்வளவு பெரிய நாயகர்கள் தேவைப்படவில்லை. அவர்களுக்குத் தீனி போடுவது போலக் கதாபாத்திரங்கள் அமைந் தால் மட்டுமே சரியாக இருக்கும். கதையில் அதர்வா ஒரு கதாபாத்திரம் மட்டுமே, நாயகன் அல்ல. அடுத்ததாக பெரிய கதையை இயக்கும் போது கண்டிப்பாக அவர்களிடம் போய்க் கேட்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x