கமல் பிறந்தநாள் விழா

கமல் பிறந்தநாள் விழா
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசன் வியாழக்கிழமை தனது 59 வது பிறந்தநாளை வியாழக்கிழமை கொண்டாடினார். இதை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தனது ரசிகர் மன்றம் சார்பில் மிதிவண்டி, தையல் இயந்திரம், இன்வெர்டர் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

குஷ்பு, சுஹாசினி, விவேக், மோகன், சுதா ரகுநாதன், பாடகி மஹதி, மயில்சாமி, அனுஜா ஐயர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் வந்து கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து கூறினார். சமூக வலைதளங்களான முகநூல், டிவிட்டரிலும் வாழ்த்துகள் குவிந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in