

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் 'நிபுணன்' ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன்.
'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தொடர்ந்து தமிழில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'நிபுணன்' படத்தை இயக்கி வருகிறார் அருண் வைத்தியநாதன். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
எப்போது வெளியீடு என்று தெரியாத நிலையில், தற்போது ஜுலை 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள 150-வது படம் 'நிபுணன்' என்பது குறிப்பிடத்தக்கது.