

ரஜினி நடிக்கவுள்ள 'காலா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி பாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். மே 28ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.
தற்போது, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி பாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'நா பங்காரு தாளி' என்ற படத்துக்காக தேசிய விருது மற்றும் நந்தி விருது பெற்றவர். மேலும் உலகளவில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த அஞ்சலி பாட்டில், தமிழில் நடிக்கும் முதல் படம் 'காலா' என்பது குறிப்பிடத்தக்கது.
'காலா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.