

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், தமிழில் விமல் நடித்த 'இஷ்டம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும், தனது அக்காவைப் போல திரையுலகில் முன்னுக்கு வர முடியவில்லை.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ‘கரண் வலேச்சா’வைக் காதலித்தார் நிஷா. இப்போது அவர்கள் கல்யாணத்துக்கான நாள் குறித்துவிட்டார்கள். டிசம்பர் 28ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.
அக்கா காஜல் அகர்வாலின் கால்ஷீட்டிற்காக திரையுலகினர் பலரும் காத்திருப்பதால், தன் திருமணம் குறித்து சிந்திக்காமல் இருக்கிறார் காஜல். அக்காவை முந்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைகிறார் நிஷா.