

'அழகர்மலை' கூட்டணியான ஆர்.கே - வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'நீயும் நானும் நடுவுல பேயும்' எனப் பெயரிட்டுள்ளார்கள்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நீத்து சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.
அப்படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்.கே. 'நீயும் நானும் நடுவுல பேயும்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'தண்ணில கண்டம்' பட இயக்குநர் சக்திவேல் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஆர்.கேவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுல்ளார் வடிவேலு. ஆர்.கே - வடிவேலு இணைப்பில் வெளியான 'அழகர் மலை' படத்தின் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற உள்ளது