கோவா திரைப்பட விழா: சிறப்பு விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்

கோவா திரைப்பட விழா: சிறப்பு விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்
Updated on
1 min read

கோவா திரைப்பட விழாவில் 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரை பிரமுகர் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ரஜினியை பேச அழைத்தனர், அவர், “இந்த கவுரவமிக்க விருதைப் பெறவே நான் வந்தேன், உரையாற்றுவதற்கான தயாரிப்புகளுடன் வரவில்லை.

மேலும், எனக்கு முன்னர் இரண்டு அருமையான (அருண் ஜேட்லி, அமிதாப் பச்சன்) உரையைக் கேட்டு மகிழ்ந்தேன்.

கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு 5 அல்லது 6 முறை வர முயற்சித்தேன். இயலவில்லை. இந்த முறை வரமுடிந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்.

இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன், இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதினை என் வெற்றிக்கு உதவிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன், நன்றி.” என்று சுருக்கமாக பேசி முடித்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in