

'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராதிகா, சிம்ரன் மற்றும் டிடி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சுலோவேனியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பிரதான சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார் கவுதம் மேனன். 22 நாட்களில், 12 சண்டைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக இச்சண்டைக்காட்சியை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட நாட்டின் சண்டைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்களும் பங்கெடுத்துள்ளார்கள். இதனை ஒளிப்பதிவு செய்துள்ளார் மனோஜ் பரமஹம்சா. இந்த சண்டைக்காட்சியை காட்சிப்படுத்த, படக்குழுவில் சிலர் முன்பே பயணித்து, படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.
விக்ரம் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்கள். தற்போது ராதிகா, சிம்ரன் மற்றும் டிடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.