

வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், தான் எழுந்து நடந்ததாகவும், கால் வலி குறைந்து முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் டிவிட் டரில் நேற்று பதிவிட்டிருக்கிறார்.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த மாதம் சென்னை திரும்பினார். கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனை யோடு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தான் எழுந்து நடப்பதாக நேற்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘‘ரசிகர்களுடனும், நண்பர்களுடனும் பகிர ஒரு நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்’’ என்று தெரிவித்துள்ளார்.