நட்புக்காக நாயகன் ஆனேன் : ஜி.வி.பிரகாஷ்

நட்புக்காக நாயகன் ஆனேன் : ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

நண்பர் மணி நாகாராஜுக்காகவே நாயகன் ஆனதாக, இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் படம் 'பென்சில்'. கெளதம் மேனனிடம் உதவியாளராக இருந்த மணிநாகராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். இப்படத்தின் மூலம், நாயகனாக அறிமுகமாகிறார் ஜி.வி.பிரகாஷ்.

முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ், 'மதயானைக்கூட்டம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தற்போது 'பென்சில்' படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகிறார்.

'பென்சில்' படத்தின் FIRST LOOK பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசியது :

இயக்குனர் மணி நாகராஜும் நானும் விளம்பரங்களுக்கு இசையமைத்த நாட்களிலேயே நல்ல நண்பர்கள்.

அவர் நிறைய படம் ஆரம்பிச்சு பாதியிலேயே ட்ராப்பாகி விட்டது. ஒரு படமாவது இயக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கு கைகொடுக்கணும் என்று நட்பு அடிப்படையில் இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நானாக வற்புறுத்தி வாய்ப்பு கேட்கவில்லை “ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in