

புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிக்கும் படத்துக்கு 'கீ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'திருநாள்' படத்தைத் தொடர்ந்து 'கவலை வேண்டாம்' மற்றும் 'சங்கிலி பிங்கிலி கதவத்துற' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஜீவா.
அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'கீ' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நிக்கி கல்ராணி, அணைகா சோடி, ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சென்னையில் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் காலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அனீஸ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.