

'வாய் மூடி பேசவும்' படப்பிடிப்பில் நடிகை நஸ்ரியாவுக்கு விபத்து ஏற்பட்டது.
மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் படத்தினை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகிறது. படத்திற்கு பெயர் வைக்காமல் மூணாறில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது 'வாய் மூடி பேசவும்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
மூணாறில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, நஸ்ரியா ஸ்கூட்டி பைக் ஒட்டுவது போன்ற காட்சியை படமாக்கினார்கள். மழை காரணமாக தரை வழுக்கியதால், பைக் ஓட்டும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் நஸ்ரியா.
மருத்துவமனையில் காயங்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் நஸ்ரியா, தன்னால் படப்பிடிப்பு நிற்கக் கூடாது என்று உடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
நஸ்ரியாவின் இந்த முடிவால், படக்குழு அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறது.