

'அவள் அப்படித்தான்' திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம் என்றும், இயக்குநர் ருத்ரய்யா தனித்துவமான சினிமா படைப்பாளி என்றும் நடிகை ஸ்ரீப்ரியா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
'அவள் அப்படித்தான்' திரைப்பட இயக்குநர் ருத்ரய்யா நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு அப்படத்தியின் நாயகியும் பிரபல நடிகையுமான ஸ்ரீப்ரியா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ""ருத்ரய்யா போன்ற ஒரு தனித்துவமான சினிமா படைப்பாளி இழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவள் அப்படித்தான் காலம் கடந்து விஞ்சி நிற்கும் சிறந்த படைப்பு.
நான் நடித்த படங்களிலேயே மிகச்சிறந்த படம். அதுமட்டுமல்லாமல், 'அவள் அப்படித்தான்' திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம்.
தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறேன். ருத்ரய்யா குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ருத்ரய்யா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என்று ஸ்ரீப்ரியா குறிப்பிட்டுள்ளார்.