மும்மொழிகளில் தயாராகும் தேவி: நாயகியாக தமன்னா

மும்மொழிகளில் தயாராகும் தேவி: நாயகியாக தமன்னா

Published on

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் 'தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் தமன்னா நடிக்க உள்ளார்.

இது குறித்துக் கிடைத்த தகவலின்படி, 'ஹாரர் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளார். 'தேவி' படத்தில் காமெடி முக்கியப் பங்கு வகித்தாலும், ஹாரர் காட்சிகள் புதுமையான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் பார்வையாளர்களை வியப்புக்கு உள்ளாக்கும்' என்று கூறப்படுகிறது.

'தேவி' படம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு 'அபினேத்ரி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தி ஆக்கத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படத்தில் ஏமி ஜாக்சன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபுதேவா, கோனா வெங்கட், சத்யநாராயணா ஆகியோர் தயாரிக்கின்றனர். இயக்குநர் விஜய்யுடன் ஹாலிவுட் கதாசிரியரான ஆரோம் பால் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in