

'மின்மினி' படத்தின் பெயரை 'ராட்சசன்' என பெயர் மாற்றம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கி வரும் இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
அமலா பால், காளி வெங்கட், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கு ’மின்மினி’ எனப் பெயரிட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதையாகும். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் நடித்துள்ளனர். தற்போது 'மின்மினி' பெயரை 'ராட்சசன்' என மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, விரைவில் டீஸர் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.