இயக்குநர் வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்

இயக்குநர் வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு மீது நடிகை சோனா புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், இயக்குநர் வெங்கட்பிரபு படம் இயக்கித் தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணத்தை தன்னிடம் இருந்து வாங்கியி ருப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக அதை திரும்பி தராமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தி இந்துவிடம் நடிகை சோனா கூறியதாவது:

வெங்கட்பிரபுவின் ‘கோவா’ படம் முடிந்த கையோடு அடுத்து எனக்கு ஒரு படம் இயக்கித்தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான வேலை எதுவும் நடக்கவில்லை. அதிலிருந்து பல முறை அவரிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளேன். ஆனால் அவரோ ரூ. 50 ஆயிரமும், 1 லட்சமும் கொடுத்து அனுப்பிவிடுகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக தராமல் இருக்கும் அந்த தொகையை அவர் திருப்பித் தர ஏற்பாடு செய்யுமாறு நடிகர் சங்கத்தில் மூன்று நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தேன். சனிக்கிழமையன்று (இன்று) இரு தரப்பினரையும் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக நடிகர் சங்கத்தில் கூறியிருக் கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் விரைவில் ‘பிரியாணி’ திரைப்படம் வெளிவரவுள்ளது. அதற்கு முன்பாக என் பணத்தை திரும்பத்தருமாறு கேட்டிருக்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை சோனா, வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பரும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனுமான சரண் மீது ஏற்கனவே பாலியல் புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in