

ப்ரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அப்படச் சமயத்தில் விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட நட்பால், கதை பிடித்துவிட நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் பல்வேறு படங்களில் நடித்து வந்ததால், '96' படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில் சென்னையில் '96' படத்தின் படப்பிடிப்பு, படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.