படத்தணிக்கையை எளிமையாக்க விஷால் கோரிக்கை

படத்தணிக்கையை எளிமையாக்க விஷால் கோரிக்கை
Updated on
1 min read

படத்தணிக்கையை எளிமையாக்க வேண்டும் என்று மத்திய தணிக்கை குழு அதிகாரியிடம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நேரில் கோரிக்கை விடுத்தார்.

சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது படத்தணிக்கை முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என தணிக்கை குழுத் தலைவர் மதியழகணை சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.

திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தணிக்கைக்கு அனுப்புவதால் தான் படங்கள் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கும் சூழல் ஏற்படுகிறது. படங்கள் வெளியீட்டு தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தணிக்கை குழுவிற்கு அனுப்பிவைத்தால் மட்டுமே திரைப்படம் வெளியாகும் போது எவ்வித தடங்களும் இல்லாமல் வெளியாகும். இதை கூடிய விரைவில் நடைமுறைபடுத்த இருக்கிறோம்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா துறைக்கே பெரும் இழப்பு. மத்திய அரசாங்கத்திடம் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்தி, கமல்ஹாசன் சார் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்ட கடிதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளோம்" என்று பேசினார் விஷால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in