

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஹாஜி மஸ்தான் கதை என்று வெளியான செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.
இந்நிலையில், இப்படம் ஹாஜி மஸ்தான் என்ற மும்பை தாதா மற்றும் தொழிலதிபரின் கதையை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடலூரில் பிறந்து, மும்பையில் பெரிய தாதாவாக எப்படி வளர்ந்தார் என்பதை ரஞ்சித் திரைக்கதையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இத்தகவல் குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "ஹாஜி மஸ்தான் கதையை ரஞ்சித் இயக்கவில்லை. இக்களம் வேறு. என்ன களம் என்பதை தற்போதைக்கு கூற இயலாது" என்று தெரிவித்தார்கள்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த 'தலைவா' வெளியீட்டுக்கு முன்பு, அக்கதை 'ஹாஜி மஸ்தான்' கதை என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.