

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்துக்கான முதல் 3 நாட் களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உரு வாகியுள்ள ‘கபாலி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகிறது. இந்திப் படங்களுக்கு இணையாக 4 ஆயி ரத்துக்கும் அதிகமான தியேட்டர் களில் இப்படம் திரையிடப் ப டுகிறது. ‘கபாலி’ வெளியாகும் தியேட்டர்களில் படத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய கடந்த 2 நாட்களாகவே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலை யில் இப்படத்துக்கான முதல் 3 நாட் களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளியாவதை முன்னிட்டு தியேட் டர்களுக்கு வெளியே ரஜினியின் கட் அவுட்டுகளை வைத்தும், தோரணங்களைக் கட்டியும் இப்ப டத்தை வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராக உள் ளனர்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்த், அங்குள்ள விநியோகஸ்தர்களு டன் சேர்ந்து நேற்று முன்தினம் ‘கபாலி’ படத்தை பார்த்துள்ளார். பின்னர் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வாழ்த்து களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘கபாலி’ படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.