Published : 02 Oct 2013 10:26 AM
Last Updated : 02 Oct 2013 10:26 AM

தூக்கம் வரல.. பசி எடுக்கல... - நஸ்ரியா

கேரள மக்கள்தொகையில் இருபது வயதுக்கு உட்பட்ட பெண்களில் பாதிபேர் கோலிவுட்டில்தான் குடியேறியிருப்பார்கள் போலி ருக்கிறது! ஆனால் ரசிகர்களின் மனதில் குடியேறும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை! அசின், நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன் வரிசையில் தற்போது நஸ்ரியாவுக்கு அந்த இடம் கிடைத்திருக்கிறது. ஆர்யாவுடன் நடித்த ‘ராஜா ராணி’வெற்றிப்படம் ஆகியிருக்க, இவரது கையில் அரை டஜன் படங்கள்! சீனாவை விட ஜெட் வேகத்தில் ஆக்கிரமித்திருக்கும் நஸ்ரியாவின் வெற்றி ரகசியம் என்ன? திருமணம் என்னும் நிக்கா இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தவரைப் பிடித்தோம்?

எப்படி இருக்கு திருமணம் என்னும் நிக்கா?

இந்தப் படத்தோட இயக்குனர் ‘அனீஸ்’ சார்தான் என்னை முதல்ல இங்கே அறிமுகம் செஞ்சார். கதையக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கல. ஏன்னா நான் வளர்ந்தது இஸ்லாம் கல்சர். எனக்கு பிராமின் கல்சர் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, என்னோட தோழி சவிதா, ‘நீ எங்க வீட்ல பொறந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்’னு அடிக்கடி சொல்வா! அவ வீட்டு கொலுவுக்கு போயிருக்கேன். துபாய்ல படிச்சப்போ ஸ்கூல்ல ‘பாலகிருஷ்ணாவா’பேன்சி டிரஸ் பண்ணியிருக்கேன். இந்தப் படத்துல வடகலை ஐயங்கார் வீட்டுப் பெண்ணா நடிக்கிறேன்.

என்ன கதை?

சொன்னா, டைரக்டர் என்னை கொன்னு போட்டுடுவார்! இருந்தாலும் சின்னதா சொல்றேன். இந்தப் படத்துல ஒரு இஸ்லாமியத் திருமணத்தை முழுமையாக காட்டுறார் இயக்குனர். அதேபோல வடகலை ஐயங்கார் கலாச்சாரத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்தத்தையும் காட்டுறார். படத்தோட தலைப்புல திருமணம்கிற சொல்லும் நிக்காங்கிற சொல்லும் இருக்குற சீக்ரெட் இதுதான்! போதுமா?

கேரள இஸ்லாமியக் குடும்பங்கள்ல இருந்து சினிமாவுக்கு வர அனுமதி இருக்கா?

ஒய் நாட்? ஆனா வட இந்தியா மாதிரி இங்க மனம்போன போக்குல எல்லா கேரக்டர்ஸும் பண்றதுக்கு அப்பா அம்மாகிட்ட அனுமதி இல்ல. அதைவிட கிளாமரான கேரக்டர்ஸ் செய்றதுல எனக்கு விருப்பமும் இல்ல. கிளாமர் எனக்கு வேண்டவே வேண்டாம்.

சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

சொந்த ஊர் திருவனந்தபுரம். எனக்கு சினிமாவோ, டிவியோ புதுசில்ல! பத்து வயசுலேயே நடிக்க வந்துவிட்டேன். பிரபல மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி அங்கிள்தான் ’பலங்கு’ன்ற மலையாளப் படத்தில என்னை அறிமுகப்படுத்தினாங்க! அதுல மம்மூட்டி சாருக்கு மகளா நடிச்சேன். அப்போ ஆரம்பிச்சதுதான்! இங்கே விஜய் டிவியில இப்போ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாப்புலரா இருக்க மாதிரி, ஏசியாநெட்ல ’ஸ்டார் சிங்கர் ஜூனியர்’ மியூசிக் ரியாலிட்டி ஷோ ரொம்ப பாப்புலர்! அந்த ஷோவை நான்தான் ஆங்கர் பண்ணினேன்,. ஏசியாநெட் சேனலுக்காக நிறைய சினிமா நட்சத்திரங்களை இன்டர்வியூ பண்ணியிருக்கேன்.

இந்த இடத்துல ஒரு விஷயம்.. சினிமால நீங்க ஜெயிச்சதும் ‘ இந்த பெண் நம்ம தயாரிப்பாச்சேன்னு ஏசியாநெட்ல உங்களைப் பேட்டி எடுத்தாங்களா?

நல்லா கேட்டீங்க! இந்த வருஷம் ஓணம் ஸ்பெஷல் என் பேட்டிதான். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணினேன்.

தமிழ்சினிமால எப்படி வாய்ப்பு அமைஞ்சது?

சோனி மியூசிக் நிறுவனம் தயாரிச்ச ’யூவ்’ங்கிற மியூசிக் ஆல்பம்ல “நெஞ்சோடு சேர்ந்துன்னு” ஒரு பாட்டை மட்டும் வீடியோ பண்ணியிருந்தாங்க! அந்த ஆல்பம்தான் எனக்கு தமிழ்சினிமால வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது! அதுல என்னைக் காதலிச்சு உருகுற அதே நிவின்தான் ‘நேரம்’ படத்துல ஹீரோ! இப்போ மூணாவது முறையா நானும் நிவினும் ‘ஓம் சாந்தி ஓசானா’ படத்துக்காக ஜோடி சேர்ந்திருக்கோம்.

அப்போ கிசு கிசு நிச்சயம்னு சொல்லுங்க!

நல்லவேளை நிவின் பாலிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.

ராஜா ராணி படப்பிடிப்புல ஆர்யா உங்களை கலாய்ச்சுக்கிட்டே இருந்தாராமே?

எல்லோருமே சொன்னாங்க! ஆர்யாகிட்ட ஜாக்கிரதையா இருங்க.. அவர் ஒரு ஜொள் ளர்னு! பொதுவா பெண்கள் அழகா இருந்தா, அவங்களைப் பார்த்து இளை ஞர்கள் ஜொள்ளு விடலைன்னாதான் அவங்க ளுக்கு பிரச்சினை! ஆர்யா பத்தி வெளியே சொல்றது எல்லாமே பொய்! ஆர்யா வீட்டுக்கும் போயிட்டு வந்தேன்.

சமீபத்துல உங்களை பாதித்த விஷயம்?

நய்யாண்டி படப்பிடிப்பு தஞ்சாவூர் பக்கத்துல நடந்தப்போ, நடிக்க வந்திருந்த ரெண்டு யங் கேர்ள்ஸ், கிராமத்துல இருந்த குளத்துல அதிகாலையில குளிக்கப் போய் மூழ்கி இறந்துட்டாங்க. எனக்கு இரண்டு நாள் தூக்கம் வரல. எதுவும் சாப்பிட முடியல. இதுமாதிரி யாருக்குமே நடக்க வேண்டாம்னு டெய்லி வேண்டிக்கிறேன்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x