

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் 'குற்றம் 23' திரைப்படத்துக்காக க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
அருண் விஜய், மகிமா நம்பியார், வம்சி உள்ளிட்ட பலர் நடிக்க அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குற்றம் 23'. இப்படம் மருத்துவம் சார்ந்த த்ரில்லர் படம். இந்திர குமாரின் 'ரேடான் தி சினிமா பீபிள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
அருண் விஜய் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இறுதிகட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி வருகிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சிகள் குறித்து இயக்குநர் அறிவழகன், "காரில் துரத்தி கொண்டு போகும் ஒரு சண்டை காட்சி எங்கள் படத்தில் இருக்கிறது. அந்த காட்சியை நாங்கள் தற்போது சென்னையில் நள்ளிரவு ஆரம்பித்து விடியற்காலை வரை படமாக்கி வருகிறோம். அதனை தொடர்ந்து எங்கள் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு படூர் பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், 'வா டீல்' படத்துக்கு முன்பாகவே இப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.