

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது தன்னடக்கம் தன்னை வியக்கவைத்தாக சிலாகித்துக் கூறினார்.
என்.டி.டி.வி விருது வழங்கும் விழாவில் ரஜினியும் சச்சினும் சந்தித்துப் பேசினர்.
ரஜினியுடனான சந்திப்பு குறித்து என்.டி.டி.வி.க்கு சச்சின் அளித்த பேட்டியில், "அவர் வந்து என்னை சந்தித்தது ஒரு நெகிழ்வான விஷயம். அவருடைய பணிவும் தன்னடக்கமும் என்னை வியக்க வைத்தது. நான் பின்பற்றும் பல நபர்களுள் ரஜினியும் ஒருவர்.
ரஜினியும் ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ச்சியாக அவர் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து வருவது மிகவும் மகிழ்ச்சி. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து பேசினோம். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் குறித்து நிறைய பேசினோம்" என்றார் சச்சின்.