கிராஃபிக்ஸை படத்தில் திணிக்க கூடாது: இயக்குநர் கார்த்திக் ராஜு நேர்காணல்

கிராஃபிக்ஸை படத்தில் திணிக்க கூடாது: இயக்குநர் கார்த்திக் ராஜு நேர்காணல்
Updated on
2 min read

போலீஸ் கான்ஸ்டபிளின் வாழ்க்கையை முன்வைத்து இயக்கிய ‘திருடன் போலீஸ்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘உள்குத்து’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தவரிடம் பேசியபோது...

‘உள்குத்து’ படத்தில் என்ன சிறப்பம்சம்?

முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறு பட்டு ‘உள்குத்து’வில் ஒரு ரவுடியின் வாழ்க் கையை முன்னிலைப்படுத்தி இருக்கிறேன். வழக்கமாக, ரவுடி என்றால் மற்றொரு குடும் பத்தை அடிப்பது, கொல்வது என்று இருப்பார் கள். அவர்களது குடும்பத்தில் ஒரு பிரச்சினை வந்தால் எப்படி கையாள்கிறார்கள் என்பதுதான் கதைக் களம். மேலும், குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியாது, திருமணத்துக்கு பெண் கேட்க முடியாது என அவர்கள் வாழ்க்கை நிறைய சிக்கல்கள் அடங்கியது. இதோடு அவர்களால் மற்றவர்களது குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதுபோல பல விஷயங்களை இதில் முழுமையாக சொல்லியிருக்கிறேன்.

ரவுடியின் வாழ்க்கை என்கிறீர்கள். ஆனால், மீனவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய தெரிகிறதே...

மார்க்கெட்டில் மீனை வாங்கி அதை ஒருவரிடம் வெட்டக் கொடுப்போம். அவரது வாழ்க்கைதான் இப்படம். அத்துடன் ரவுடிகளின் வாழ்க்கையையும் கோத்திருக்கிறேன். படகு ரேஸ், கடலுக்குள் சண்டை போன்றவையும் உள்ளன. சென்னை கடலில் அலைகள் அதிகம் என்பதால், இங்கு அந்த காட்சிகளை எடுக்க முடியாது. இதனால், அலைகள் இல்லாத முட்டம் பகுதியில் எடுத்துள்ளேன்.

‘திருடன் போலீஸ்’ படத்துக்கு உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?

என் அப்பா நிறைய குட்டிக் கதைகள் எழுதுவார். ஒரு வகுப்பறையில் நடக்கும் விஷயத்தை கதையாக எழுதியிருந்தார். அதை முன்வைத்துதான் ‘திருடன் போலீஸ்’ படத்தை எழுதினேன். நிறைய போலீஸ் அதிகாரிகள் போன் செய்து பாராட்டினார்கள். எஸ்.பி. ஈஸ்வரன் சார் போன் செய்து, ‘‘எனக்கு கீழ் பணியாற்றுபவர்களை நான் எப்போதும் தவறாக நடத்த மாட்டேன். இப்படி ஒரு படம் செய்ததற்கு நன்றி’’ என்று பாராட்டினார்.

நீங்கள் இயக்குநராவதற்கு உறுதுணையாக இருந்தது யார்?

விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்யும்போதே, கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். முடிவை வீட்டில் சொன்னதும் எதிர்த்தார்கள். ஆனால், பிறகு குடும்பத்தினர்தான் ரொம்ப உறுதுணை யாக இருந்தார்கள். ‘2 வருஷம் அவகாசம் கொடுங்கள். நான் இயக்குநர் ஆகாவிட்டால், மீண்டும் வேலைக்குச் சென்றுவிடுகிறேன்’ என்று கூறிவிட்டுதான் ஆரம்பித்தேன். அதன் பிறகு, பல நண்பர்கள்கூட தொடர்பை துண்டித்து விட்டனர். ரவிஷங்கர் ரொம்ப உறுதுணையாக இருந்தார். என்னை நிறைய பேரிடம் அழைத்துச் சென்றார். அப்பா, மாமனாரிடம் பணம் வாங்கி சாப்பிட்டு வந்தேன். 1-ம் தேதியானால் சம்பளம் வருவதுபோல, அம்மாவும் மனைவியும் பணம் கொடுப்பார்கள். நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் செல்வகுமார் என் கஷ்டத்தைப் பார்த்து ‘வாடா.. வாய்ப்பு தர்றேன்’ என்றார். நான் இயக்குநரானதற்கு காரணம் என் மனைவி, செல்வகுமார், கோபி, சக்தி விஸ்வநாதன், ரவிஷங்கர்தான்!

நீங்கள் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை. உங்களது உதவி இயக்குநர்களை எப்படி கையாள்கிறீர்கள்?

நான் வேலை செய்தபோது, படப்பிடிப்புக்கு போயிருக்கிறேன். அப்போது உதவி இயக்குநர் களை இயக்குநர்கள் கடுமையாக திட்டுவார்கள். அவர்களோ வெளிக்காட்டிக் கொள்ளாமல், தலையை குனிந்துகொண்டு போய்விடுவார் கள். ‘நான் இயக்குநரானால் யாரையும் திட்டக் கூடாது’ என்பது அப்போது எடுத்த முடிவு. என் படக்குழு முழுக்க வித்தியாசமாக இருக்கும். தற்போது என்ன காட்சி எடுக்கிறோம் என்ற பேப்பர், என் குழுவில் உள்ள உதவி இயக்கு நர்கள் எல்லோரிடமும் இருக்கும். மானிட்டரில் காட்சி சரியாக வந்திருக்கிறதா என்று அனை வருமே பார்ப்போம். யார் என்ன திருத்தம் சொன்னாலும், சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன். ஈகோ எல்லாம் கிடை யாது. சந்தோஷமாக பணியாற்ற வேண்டும். நல்ல படம் தரவேண் டும். அதுதான் நோக்கம்.

கிராஃபிக்ஸ் துறையில் இருந்து வந்திருக்கிறீர்கள். முழுக்க கிராஃபிக்ஸ் பின்னணி யில் படம் எடுக்கும் எண்ணம் உண்டா?

அப்படியொரு எண் ணமே கிடையாது. எனக்கு எப்போதுமே காமெடி தான் பிடிக்கும். நல்ல படத்துக்கு கதைதான் முக்கியம்; கிராஃபிக்ஸ் அல்ல! அனைத்து தரப்பினரும் படத் தோடு ஒன்றிப்போக வேண்டும் என்ற நோக் கத்தில்தான் கதையே எழுது வேன். ஏதாவது ஒரு காட் சிக்கு தேவை என்றால்தான் கிராஃபிக்ஸ் செய்வேன். சிறந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது. முழுக்க கிராஃபிக்ஸ் பின்னணியில் வித்தியாசமான களத்தில் எனக்கு கதை எழுத தெரியாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in