

பிரபல இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, திரைக் கலை யின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்கும் வகையில், திரைப்பட கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, இயக்கம், நடனம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் கவுரவ ஆலோசகர் களாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார், திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், ப்ரியதர்ஷன், ராஜீவ்மேனன், கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.